News Just In

6/23/2020 03:04:00 PM

சிறார்களை ஆற்றுப்டுத்தல் செயற்திட்டத்திற்கு உதவி

ஏ.எச்.ஏ. ஹுஸைன் 
மட்டக்களப்பில் சிறார்களை ஆற்றுப்படுத்துவதற்கும் அவர்களது அறிவு ஆற்றல் செயற்திறனை வளர்ப்பதற்குமான செயற்திட்டத்திற்கு உதவு ஊக்கம் வழங்கப்பட்டுள்ளது.

தேசிய சிறுவர்கள் பாதுகாப்பு அதிகார சபையின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்த உதவு ஊக்க நிகழ்வு செவ்வாய்க்கிழமை 23.06.2020 மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் மாவட்டச் n செயலாளர் கலாமதி பத்மராஜா தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் மாவட்டச் செயலாளர் கலாமதி மாவட்டத்தில் இயங்கிவருகின்ற சிறுவர் இல்லங்களுக்கு உலக அறிஞர்கள் ஞானிகள் புனிதர்கள் ஆகியோரின் நூல் தொகுதியினை வழங்கிவைத்தார்.

கொரோனா வைரஸ் பரவல் காலங்களில் பாடசாலை செல்லாமல் வீடுகளிலும் சிறுவர் பராமரிப்பு இல்லங்களிலும் உள்ள சிறார்களின் அறிவு திறன் மனப்பாங்கு என்பவற்றினை முன்னெடுப்பதற்கான ஒரு வேலைத்திட்டமாகவே இந்த வேலைத்திட்டத்தினை தேசிய சிறுவர்கள் பாதுகாப்பு அதிகார சபை முன்னெடுத்துள்ளது

இந்நிகழ்வில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சுதர்சினி சிறிகாந்த்; மாவட்ட உதவிச் செயலாளர் ஏ. நவேஸ்வரன் மாவட்ட சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர் மஹ்பூன்னிஸா றியாஸ், சிரேஷ்ட சிறுவர் நன்னடத்தை உத்தியோகத்தர் எம். நஜீமுதீன் மாவட்ட உளவள உத்தியோகத்தர் எஸ். பிரபாகரன் சிறுவர் இல்லங்களின் பொறுப்பாளர்கள் சிறுவர்கள் உத்தியோகத்தர்கள் உள்ளிட்டோரும் கலந்துகொன்டனர்.            ‪












No comments: