News Just In

6/29/2020 01:32:00 PM

மட்டக்களப்பில் குடும்பப் பெண் உயிரிழப்பு; கணவன் கைது

ஏ.எச்.ஏ. ஹுஸைன்
மட்டக்களப்பு- களுவாஞ்சிகுடியில் வீட்டிலிருந்து குடும்பப் பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளநிலையில் அப்பெண்ணின் கணவன் கைது செய்யப்பட்டுள்ளதாக களுவாஞ்சிக்குடி பொலிஸார்தெரிவித்தனர்.

களுவாஞ்சிகுடிசரஸ்வதி வித்தியாலய வீதியை அண்டியுள்ள வீட்டிலிருந்து இரண்டு பிள்ளைகளின் தாயான 34வயதுடைய துர்க்கா என்பவரின் சடலமே ஞாயிற்றுக்கிழமை 28.06.2020 மீட்கப்பட்டிருந்து.கணவனுக்கும் மனைவிக்கும் ஏற்பட்ட குடும்பத் தகறாறு காரணமாக தனது மகளை மகளின் கணவரே கொலைசெய்துள்ளார் என பெண்ணின் தாயான தேவநேசராசா சாந்தநிதி வாக்குமூலம் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் ஸ்தலத்திற்கு விரைந்த களுவாஞ்சிகுடி பெலிஸாரும், மட்டக்களப்பு தடயவியல் பொலிஸ்பிரிவும் இணைந்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.













No comments: