பத்து நாட்கள் நடைபெறும் திருவிழா நிகழ்வில் அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை, தேவார பாராயணம், சுவாமி வலம் வருதல், ஆசிர்வாதம் ஆகிய நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன.
பத்தாம் நாள் (28.06.2020) ஞாயிற்றுக்கிழமை காலை தீர்த்த உற்சவத்துடன் ஸ்ரீ சித்தி விநாயகரின் மஹோற்சவத் திருவிழா இனிது நிறைவடைகிறது.
ஐந்து வருடம் கழித்து கொடியேற்ற திருவிழா காணும் ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயம் தற்போதைய அசாதாரண சூழ்நிலை காரணமாக வழிபாட்டு நிகழ்வுகள் ஆராவாரம் இல்லாமல் நடைபெறுகின்றன. ஆலய நிர்வாகத்தினர் பக்தர்களுக்கு பல அறிவுறுத்தல்களை வழங்கி திருவிழாவினை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.





















No comments: