விழா நிகழ்வில் மட்டக்களப்பு மாநகர முதல்வர் தி.சரவணபவன், பிரதி முதல்வர் க.சத்தியசீலன், பிரதி ஆணையாளர் உ.சிவராஜா, மாநகர சபை உறுப்பினர்கள் மற்றும் உத்தியோகத்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.
மட்டக்களப்பு மாநகர சபை வளாகத்தில் அமைந்துள்ள அந்தோனியார் தேவாலய வருடாந்த பெருவிழா நிகழ்வுகள் இன்று (30.06.2020) செவ்வாய்கிழமை அருட்தந்தை பி. ரமேஷ் கிறிஸ்டி அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
திருச்செபமாலை, பிரார்த்தனை, திருப்பலி, மறையுரை மற்றும் ஒப்புரவு அருட்சாதனம் வழங்கல் ஆகிய நிகழ்வுகள் இடம்பெற்று விழா இனிது நிறைவடைந்தது.
















No comments: