News Just In

6/19/2020 10:58:00 PM

மட்டக்களப்பில் வீட்டொன்றில் திருடிய சந்தேக நபர்- பொருளுடன் மடக்கி பிடிப்பு


எஸ்.எம்.எம்.முர்ஷித்
வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிறைந்துறைச்சேனைபகுதியில் வீட்டில் திருடிய சம்பவம்தொடர்பில் ஓட்டமாவடியைச் சேர்ந்த நபர் ஒருவரை இன்று வெள்ளிக்கிழமை கைதுசெய்யப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன தெரிவித்தார்.

வாழைச்சேனை பிறைந்துறைச்சேனைபகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்தஆசிரியர் ஒருவரின் வீட்டில் தொலைக்காட்சி பெட்டி, தையல் இயந்திரம், கேஸ் சிலின்டர்என்பன திருடப்பட்டுள்ளதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்ட நிலையில் பொலிஸாரின்விசாரணையின் போது பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து குறித்த நபர் ஓட்டமாவடியில்வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொலிஸ்பரிசோதகர் துசிதகுமார தலைமையில் போதை தடுப்பு பிரிவு பொலிஸ் உத்தியோகத்தர் எம்.பி.எம்.தாஹா,பொலிஸ் உத்தியோகத்தர் புஸ்பகுமார ஆகியோர் மேற்கொண்ட நடவடிக்கையின் போது ஓட்டமாவடி முதலாம்வட்டாரம் புகையிரத நிலைய வீதியைச் சேர்ந்த குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

திருடப்பட்ட தொலைக்காட்சி பெட்டி,தையல் இயந்திரம், கேஸ் சிலின்டர் என்பன விற்பனை செய்யப்பட்ட நிலையில் கைப்பற்றப்பட்டுள்ளதுடன்,கொள்வனவு செய்தவரும் கைது செய்யப்பட்டுள்ளதுடன், மேலும் திருட்டு சம்பவங்களை மேற்கொண்டிருக்கலாம்என்ற சந்தேகத்தில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் வாழைச்சேனை பொலிஸ்நிலைய பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன தெரிவித்தார்.

No comments: