அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் மீராவோடை வட்டார கிளையின் ஏற்பாட்டில் களுவாமடு பிரதேசத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட சமகால அரசியலும் மட்டக்களப்பு மாவட்ட முஸ்லீம்கள் எதிர் நோக்கும் சவால்களும் எனும் தலைப்பிலான கலந்துரையால் இடம் பெறற்றது.
இந் நிகழ்வில் ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட முதன்மை வேட்பாளர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி கலந்து கொண்டு சமகால அரசியலும் மட்டக்களப்பு மாவட்ட முஸ்லீம்கள் எதிர் நோக்கும் சவால்களும் எனும் தலைப்பில் உரையாற்றினார்.
இதில் கோறளைப் பற்று மேற்கு பிரதேச சபை தவிசாளர் ஐ.ரீ. அஸ்மி, பிரதேச சபை உறுப்பினர்களான ஏ.எம். நௌபர், எம்.அமீர் ஆசிரியர், ஓட்டமாவடி பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் கே.பி.எஸ். ஹமீட், மற்றும் வட்டாரக் குழு தலைவர்களும் கலந்து சிறப்பித்தனர்.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் மீராவோடை வட்டார கிளையின் ஏற்பாட்டில் இதில் கலந்து கொண்டவர்களுக்கு பகற்போசனமும் ஏறபாடு செய்யப்பட்டிருந்தது.





No comments: