
மட்டக்களப்பு நகரில் ஐஸ் போதைப்பொருளுடன் மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்று (திங்கட்கிழமை) இரவு மூர்வீதியில் வைத்து இந்த மூவரும் விசேட அதிரடிப்படையினரின் ஒத்துழைப்புடன் இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இவர்களிடம் இருந்து சுமார் 800மில்லி; கிராம் ஐஸ் போதைப்பொருள் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
கைதுசெய்யப்பட்டவர்கள் தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் அவர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
No comments: