-ஏ.எச்.ஏ. ஹுஸைன்-
மட்டக்களப்பு குருக்கள் மடத்தில் நிலைகொண்டுள்ள 11வது காலாட்படையினரால் காத்தான்குடி கடற்கரை சிரமதானம் செய்யும் பணிகள் இன்று வெள்ளிக்கிழமை (06) முன்னெடுக்கப்பட்டது.
நாட்டைத் தூய்மையாக வைத்திருக்கும் ஜனாதிபதியின் அறிவுறுத்தலுக்கமைவாக கடற்கரையோரங்களைத் துப்புரவாக்கும் பணி தங்களால் முன்னெடுக்கப்பட்டு வருவதாக படையதிகாரிகள் தெரிவித்தனர்.
கடற்கரை தூய்மையாக்கலின்போது கடலலை மூலம் கரையொதுங்கிய கழிவுகளும், அக்கறையின்றி கடற்கரைக்கு வருவோரால் வீசப்பட்ட பிளாஸ்டிக், பொலித்தீன் போன்ற திண்மக் கழிவுகளும் படையினரால் அகற்றப்பட்டன.
3/06/2020 12:00:00 PM
Home
/
உள்ளூர்
/
காத்தான்குடி
/
மட்டக்களப்பு
/
காத்தான்குடி கடற்கரையினை தூய்மையாக்கும் பணியில் ஈடுபட்ட படையினர்
காத்தான்குடி கடற்கரையினை தூய்மையாக்கும் பணியில் ஈடுபட்ட படையினர்
Subscribe to:
Post Comments (Atom)














No comments: