News Just In

3/06/2020 12:28:00 PM

கட்டுநாயக்க விமான நிலையத்தில் பயணிகளுடன் வருவோருக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம்!!

கொரோனா வைரஸ் தொற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, கடந்த ஜனவரி 28ஆம் திகதி முதல், பயணிகளைத் தவிர ஏனையோர் கட்டுநாயக்க விமான நிலைய வளாகத்திற்குள் நுழைவதற்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டுள்ளது.

இதற்காக ரூபாய் 300 பெறுமதியான நுழைவுச்சீட்டை கொள்வனவு செய்ய வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதன்படி, இன்று (06) முதல் பயணிகளை வழியனுப்ப வருவோருக்கு இன்று மீண்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எனினும் பயணியுடன் ஒருவருக்கு மாத்திரமே செல்வதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

No comments: