News Just In

3/05/2020 01:50:00 PM

மட்டக்களப்பில் புலிகளை மீண்டும் உருவாக்கும் குற்றச்சாட்டில் ஒருவர் கைது!!


மட்டக்களப்பில் பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். மட்டக்களப்பு மத்திய வீதியில் வசிக்கும் ஜேர்மன் பிரஜாவுரிமையுடைய ஒருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கைது குறித்து எழுத்துமூலம் உரிய நபருக்கு தகவல் வழங்கிய பின்னரே பயங்கரவாத தடுப்புப் பிரிவினர் குறித்த நபரை கைதுசெய்துள்ளனர்.

விடுதலைப்புலிகளை மீண்டும் கட்டியெழுப்புதல், வெளிநாடுகளிலிருந்து உண்டியல் மூலம் பணப்பரிமாற்றம் செய்தல் ஆகிய குற்றச்சாட்டுக்களின் அடிப்படையிலேயே குறித்த நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார் என தெரியவருகிறது.

No comments: