2020 பொதுத் தேர்தல் தொடர்பாக ஆராயும் விசேட கூட்டம் ஒன்று நாளை (10) தேர்தல்கள் செயலகத்தில் நடைபெறவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் செயலாளர் எச்.எம்.ஹேரத் தெரிவித்துள்ளார்.
இந் நிலையில் பொதுத் தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகள் தமது சின்னத்தை மாற்றுவது பற்றிய விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கும் இறுதித் திகதி இன்றுடன் நிறைவடைகின்றது.
பல கட்சிகள் இதற்கான விண்ணப்பங்களை அனுப்பியுள்ளதுடன், பதிவு செய்யப்பட்ட 64 அரசியல் கட்சிகளில் 12 கட்சிகள் மாத்திரம் இம்முறை தேர்தலில் போட்டியிடுவதற்கு முன்வந்துள்ளதாகவும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் செயலாளர் குறிப்பிட்டார்.
இம்முறை தேர்தல் நடவடிக்கைகளுக்காக சுமார் ஏழு பில்லியன் ரூபா செலவாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
3/09/2020 11:52:00 AM
Home
/
உள்ளூர்
/
தேர்தல்
/
பொதுத் தேர்தல்
/
கட்சி சின்னத்தை மாற்றுவதற்கான கால அவகாசம் நிறைவு! நாளை விசேட கூட்டம்!!
கட்சி சின்னத்தை மாற்றுவதற்கான கால அவகாசம் நிறைவு! நாளை விசேட கூட்டம்!!
Subscribe to:
Post Comments (Atom)

No comments: