கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று வெப்பநிலையில் அதிகரிக்கின்றதா அல்லது குறைகின்றதா என்பது குறித்து விஞ்ஞான ரீதியில் இதுவரையில் உறுதி செய்யப்படவில்லை.
கொரோனா வைரஸ் தொடர்பில் விசேட வைத்தியர் திருமதி பிரியங்கா ரணசிங்க இவ்வாறு தெரிவித்துள்ள அவர் இதன் காரணமாக இந்த நோய் தொடர்பில் பாதுகாத்துக்கொள்வதில் புத்திசாலித்தனமாக செயல்படவேண்டும்.
கொரோனா வைரஸ் பெரும்பாலானோருக்கு பொதுவான நோய் நிலைமையாக ஏற்படக்கூடியது. சிலருக்கு சிக்கலைக்கொண்டதாக ஏற்படக்கூடும். மேலும் சிலருக்கு பாரிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும். அனர்த்த வலயத்தில் உள்ள வயது முதிர்ந்தோர் அவதானத்துடன் செயற்படக்கூடும் என்றும் அவர் தெரிவித்தார்.
கொரோனா வைரஸ் இருமல், தும்மலின் போதும் வெளியேறும் எச்சில் மூலமும் பரவக்கூடும். காற்றின் மூலம் இது பரவக்கூடிய தன்மை மிகவும் குறைவானதாகும் என்றும் விசேட வைத்தியர் திருமதி பிரியங்கா ரணசிங்க மேலும் தெரிவித்தார்.
Subscribe to:
Post Comments (Atom)

No comments: