News Just In

3/07/2020 11:23:00 AM

தண்டவாளத்தில் படுத்து நபரொருவர் தற்கொலை!!

புகையிரத தண்டவாளத்தில் படுத்து ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நேற்று (06) மாலை இடம்பெற்றுள்ளது.

யாழ்ப்பாணம் புகையிரத நிலையத்திற்கு அண்மித்த புகையிரத கடவையில் சங்கானை பகுதியைச் சேர்ந்த சுரேஸ் வயது (35) என்பவரே இவ்வாறு தற்கொலை செய்துக் கொண்டுள்ளார்.

உயிரிழந்தவர் இலங்கை போக்குவரத்து சேவை (சி.ரி.பி) பஸ் நிலையத்தில் பாதுகாப்பு உத்தியோகத்தராக கடமையாற்றி வந்துள்ளார்.

கடந்த வாரம் மது போதையில் வேலைக்கு சென்ற போது நிர்வாகத்தினரால் பணி நீக்கம் செய்யப்பட்டதனை தொடர்ந்து தற்கொலை செய்ய முயற்சித்த போது நண்பர்கள் அவரை தடுத்து காப்பாற்றியதாகவும் உறவினர்கள் தெரிவித்தனர்.

இந்நிலையில் நேற்று மது போதையில் தண்டவாளத்தில் படுத்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

சடலம் பிரேத பரிசோதனைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

No comments: