News Just In

3/07/2020 11:01:00 AM

பட்டதாரிகளின் தலைமைத்துவ பயிற்சி இடைநிறுத்தப்பட்டாலும் இம்மாதம் முதல் சம்பளம்!


அலரிமாளிகையில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் பட்டதாரிகளின் நியமனம் தொடர்பான விடயங்கள் தொடர்பில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இ அமைச்சர் பந்துல குணவர்தன ஆகியோரால் தெளிவுபடுத்தப்பட்ட்து.

நியமனங்களை பெற்றுள்ள பட்டதாரிகள் பிரதேச செயலகங்களுக்குச் சென்று கையொப்பமிடுமாறும் , தங்களுக்குரிய நியமனக் கடிதங்கள் கிடைக்காத பட்டதாரிகள் மீள்மனு (Appeal) செய்யலாம் என அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

பட்டதாரிகளுக்கான நியமனத்தை தேர்தல் ஆணைக்குழு இடைநிறுத்தியுள்ள போதிலும் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ள பட்டதாரிகளுக்கு இம்மாதம் முதல் சம்பளம் வழங்கப்படும் எனவும் , பொதுத் தேர்தல் முடியும்வரை பயிற்சிகள் வழங்கப்படாது எனவும் தெரிவித்த பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ

பட்டதாரிகளுக்கான நியமனத்தை தேர்தல் ஆணைக்குழு இடைநிறுத்தியமை தொடர்பில் பட்டதாரிகள் நீதிமன்றத்துக்குச் சென்று பணத்தை செலவழிக்காமல் இரண்டு மாதம் வீட்டிலிருந்தவாறே சம்பளத்தைப் பெற்றுக்கொண்டு பின்னர் வேலைக்குச்செல்வதே சரியாக இருக்கும் எனவும் தெரிவித்தார்.

No comments: