News Just In

3/03/2020 03:05:00 PM

மாணவர்களிடம் நல்லுறவைக் கட்டியெழுப்பும் சிந்தனை வளர்க்கப்பட வேண்டும்-கிழக்கு ஆளுநர் அனுராதா


ஏ.எச்.ஏ. ஹுஸைன்
மாணவர்களிடம் நல்லுறவைக் கட்டியெழுப்பும் சிந்தனை வளர்க்கப்பட வேண்டும் என கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் தெரிவித்தார்.

மட்டக்களப்பு சந்திவெளி சித்திவிநாயகர் கனிஷ்ட வித்தியாலயத்தில் அமைக்கப்பட்ட புதிய வகுப்பறைக் கட்டிடத்தினை திறந்து வைக்கும் நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு அவர் அதிபர், ஆசிரியர்கள் மாணவர்கள் மத்தியில் உரையாற்றினார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர் மேலும் கூறியதாவது,

இன மொழி மத சாதி வேறுபாடுகள் அற்ற சிறந்த சமூகத்தினை கட்டி எமுப்புகின்ற நல்லெண்ணத்துடன் வாழ்வதற்கு மாணவர்கள் பழக்கப்படுத்தப்பட வேண்டும்.

இத்தகை சிறநந்த மாணவர்களாக வருபவர்களே எதிர்காலத் தலைவர்களாகவும் திகழ முடியும்

அதன்மூலமாகவே சுபீட்சம் நிறைந்த நாடாக இலங்கையை மாற்றிமைக்கவும் முடியும்.' என்றார்.

ரீ.கணபதிப்பிள்ளையின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் சிரேஷ்ட உதவிச் செயலாளர் வி. தவராசா வலயக்கல்வி பணிப்பாளர் திரவியம் ரவி ஆகியோருடன் பெற்றோர், ஆசிரியர்கள், மாணவர்கள் பாடசாலை நலன் விரும்பிகளும் கலந்து கொண்டனர்.






No comments: