
மட்டக்களப்பு மாவட்டத்தின் போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மிகவும் கல்வி நிலையில் பின்தங்கியுள்ள மாணவர்களின் நன்மை கருதி திருப்பழுகாமம் மாவற்குடாவில் சிவராஜா கல்வி நிலையம் திறந்துவைக்கப்பட்டது.
திருப்பழுகாமம் மாவற்குடாவில் மக்கள் அடிப்படை வசதிகளற்ற நிலையில் கல்வி கற்பதற்கான போதிய வசதிகள் இல்லாத நிலையிலும் அப்பகுதி மக்கள் பெரும் கஸ்டங்களை எதிர்நோக்கிவந்தனர்.
இந்த நிலையில் கனடா சிவன் அறக்கட்டளை நிதியத்திடம் விடுக்கப்பட்ட வேண்டுகோளின் அடிப்படையில் கனடாவினை சேர்ந்த சிவராஜா,ரஜனி தம்பதிகளின் உதவியுடன் இந்த கல்வி நிலையம் திறந்துவைக்பபட்டது.
இப்பகுதியில் உள்ள மாணவர்கள் நீண்டதூரத்தில் உள்ள பகுதிகளுக்கே பிரத்தியேக கல்வி நடவடிக்கைகள் மற்றும் முன்பள்ளி கற்கைகளுக்கு செல்வதன் காரணமாக தமது பிள்ளைகளுக்கு கல்வி வழங்குவதில் இப்பகுதி மக்கள் பெரும் கஸ்டங்களை எதிர்கொண்டுவந்தனர்.
இது தொடர்பில் திருப்பழுகாமத்தினை சேர்ந்த பரமேஸ் என்பவர் மேற்கொண்ட முயற்சியினால் இந்த உதவிகள் வழங்கப்பட்டன.
முன்பள்ளியாகவும் பிரத்தியேக வகுப்புகளை நடாத்தும் விதமாகவும் இந்த கல்வி நிலையம் அமைக்கப்பட்டுள்ளதுடன் அதற்கான தளபாட வசதிகளும் செய்துகொடுக்கப்பட்டுள்ளன.
இதன் திறப்புவிழாவில் சிவன் அறக்கட்டளை நிதியத்தின் பணிப்பாளர் ஹேமதாசன்,கல்வி நிலையத்திற்கு நிதி உதவி வழங்கிய சிவராஜா,ரஜனி தம்பதிகள் மற்றும் கனடாவினை சேர்ந்த காந்தன் ஆகியோர் இதில் கலந்துகொண்டனர்.
இதன்போது மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்களும் வழங்கிவைக்கப்பட்டதுடன் மிகவும் வறிய நிலையில் தந்தை சுகவீனமுற்ற நிலையில் கல்வியை தொடர்வதற்கு மிகவும் கஸ்ட நிலையில் உள்ள மாணவி ஒருவருக்கு துவிச்சக்கர வண்டியொன்று சிவன் அறக்கட்டளை நிதியத்தினால் இதன்போது வழங்கிவைக்கப்பட்டது.
ஆத்துடன் மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்களும் வழங்கிவைக்கப்பட்டதுடன் இப்பகுதி மாணவர்களுக்கு ஓரு நாள் சிறந்த உணவினை வழங்கும் திட்டமும் அறிமுகம் செய்துவைக்கப்பட்டது.
பல்வேறு கஸ்டங்களுடனும் பின்னடைவுகளுடனும் தினமும் பல்வேறு கஸ்டங்களுடன் வாழும் இப்பகுதி மக்களுக்கு அடிப்படை தேவைகளை பூர்த்திசெய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு இங்கு வேண்டுகோள்விடுக்கப்பட்டது.



















No comments: