(க.விஜயரெத்தினம்)
தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையினை வலியுறுத்தியும், காணாமல் போனவர்களின் பிரச்சினைக்கு முழுமையான தீர்வினை கோரியும் மட்டக்களப்பில் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று இடம்பெற்றது.
மட்டக்களப்பு- காந்திபூங்காவில் இந்த போராட்டம் நேற்று சனிக்கிழமை(7) காலை 10.00 மணியளவில் இடம்பெற்றது. மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள பெண்கள் அமைப்பு, காணாமல் போனோர் அமைப்பு, சிவில் அமைப்புக்கள், பெண்கள் உட்பட பல்வேறு அமைப்புகள் இணைந்து இந்த கவனயீர்ப்பு போராட்டத்தினை முன்னெடுத்தனர்.
காந்தி பூங்காவில் பேரணி ஆரம்பமாகி காந்திபூங்கா முன்பக்கவுள்ள படுகொலைசெய்யப்பட்ட ஊடகவியலாளர்களின் நினைவுத்தூபிக்கு அருகில் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இந்த போராட்டத்தில் பெண்கள் அமைப்புகளின் பிரதிநிதிகள், அருட்தந்தையர்கள் , அரசியல் கைதிகளின் குடும்ப உறுப்பினர்கள், காணாமல்போனவர்களின் குடும்ப உறுப்பினர்கள் என பலர் கலந்துகொண்டனர்.
இதன்போது நுண்கடனால் பொதுமக்கள், பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை தடுக்க கோரியும், காணாமல்போனவர்களின் பிரச்சினைக்கான தீர்வினை வழங்குமாறும், பெண்கள் அன்றாடம் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சினைக்கான தீர்வினை வழங்குமாறு இதன்போது வலியுறுத்தப்பட்டது.இதன்போது சுலோக அட்டைகளை தாங்கி நின்று கவனயீர்ப்பு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தமது பிரச்சனையை தெரிவித்தார்கள்.
இந்த கவனயீர்ப்பு ஆர்பாட்டத்தில் நூற்றுக்கு மேற்பட்டவர்கள் கலந்துகொண்டார்கள். இப்போராட்டத்தில் குதித்தவர்கள் காணாமல் போனவர்கள் பிரச்சினையை மறக்குமாறு ஜனாதிபதி கோரியதற்கு எதிரான கருத்துகளையும் இதன்போது தெரிவித்தார்கள்.
3/08/2020 10:30:00 AM
Home
/
உள்ளூர்
/
மட்டக்களப்பு
/
தமிழ் அரசியல் கைதிகள்-காணாமல் போனவர்களுக்கு நீதி வேண்டி மட்டக்களப்பில் கவனயீர்ப்பு போராட்டம்
தமிழ் அரசியல் கைதிகள்-காணாமல் போனவர்களுக்கு நீதி வேண்டி மட்டக்களப்பில் கவனயீர்ப்பு போராட்டம்
Subscribe to:
Post Comments (Atom)








No comments: