(எஸ்.சதீஸ்)
மட்டக்களப்பு வவுணதீவு பிரதேசத்துலுள்ள வாழைக்காலை கிராமத்தில் சிவசக்தி விளையாட்டுக் கழக மைதானம் திறப்பு விழாவும் உதைபந்தாட்டச் சுற்றுப் போட்டியும் இன்று சனிக்கிழமை நடைபெற்றது.
கழகத்தின் தலைவர் கி. தயாபரன் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னா் பாராளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து சிறிநேசன், மண்முனை மேற்கு பிரதேச சபை உறுப்பினர் சதாசிவம் மோகன்,
சமுர்த்தி உத்தியோகத்தர் கணபதிப்பிள்ளை சிவசம்பு, சமுகசேவகர் தவராசா விமல் மற்றும் கிராம அபிவிருத்திச் சங்க பிரதிநிதிகள், சிவசக்தி விளையாட்டுக் கழக உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்து சிறப்பித்தனர்.
இதன்போது முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து சிறிநேசன், மண்முனை மேற்கு பிரதேச சபை உறுப்பினர் சதாசிவம் மோகன் உள்ளிட்டோரால் விளையாட்டு மைதானம் திறந்துவைத்து கழகத்திடம் கையளிக்கப்பட்டது. தொடர்ந்து உதைபந்தாட்டச் சுற்றுப்போட்டியினை முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிறிநேசன் ஆரம்பித்து வைத்தார்.
இப் போட்டியில் 42 விளையாட்டு அணிகள் கலந்துகொள்வதற்கு பதிவு செய்யப்பட்டிருந்ததுடன் போட்டியின் பரிசு வழங்கும் நிகழ்வு நாளை ஞாயிற்றுக்கிழமை மாலை இடம்பெறும் எனவும் கழகத்தின் தலைவர் கி. தயாபரன் தெரிவித்தார்.
இந் நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிறிநேசன் உரையாற்றுகையில்,
கொள்கையோடு பயணிப்பவர்களையும், மக்களுக்காக உழைப்பவர்களையும் மக்கள் அறிந்துகொண்டு சரியான தெரிவுகளை செய்யும்போது மக்கள் கவனமாக இருக்கவேண்டும்.
இந்த வவுணதீவு பிரதேசத்திற்கு 9 கோடிகளுக்கும் அதிகமான அபிவிருத்திவேலைகளை செய்திருக்கின்றோம். ஊழல், மோசடி, கையூட்டல் இல்லாமல் சிறப்பான முறையில் இந்த பிரதேசத்தை அபிவிருத்தி செய்ய வேண்டும் என்று தமிழ் தேசிய கூட்டமைப்பினர் விரும்புகின்றார்கள் என இந்த நிகழ்வில் கலந்துகொண்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிறிநேசன் தெரிவித்தார்.
3/07/2020 03:30:00 PM
Home
/
உள்ளூர்
/
ஞா.ஸ்ரீநேசன்
/
மட்டக்களப்பு
/
மட்டு. வவுணதீவு வாழைக்காலை சிவசக்தி விளையாட்டுக் கழக மைதானம் திறப்பும், உதைபந்தாட்டச் சுற்றுப் போட்டியும்
மட்டு. வவுணதீவு வாழைக்காலை சிவசக்தி விளையாட்டுக் கழக மைதானம் திறப்பும், உதைபந்தாட்டச் சுற்றுப் போட்டியும்
Subscribe to:
Post Comments (Atom)









No comments: