News Just In

3/07/2020 02:41:00 PM

கொரோனாவுக்கான தனிமைப்படுத்தப்பட்ட மையமாக மாறும் மட்டு.தனியார் பல்கலைக்கழகம்!


கொரோனா வைரஸிற்கான தனிமைப்படுத்தப்பட்ட இடமாக மட்டக்களப்பு தனியார் பல்கலைக்கழகத்தை பயன்படுத்த சுகாதார அமைச்சு முடிவு செய்துள்ளது.

இந்த விடயம் தொடர்பான அரசாங்கத்தின் நிலைப்பாடு அடங்கிய கடிதத்தினை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அனில் ஜசிங்க , மட்டக்களப்பு தனியார் பல்கலைக்கழக உரிமையாளர்களுக்கு அனுப்பியுள்ளார்.

மட்டக்களப்பு தனியார் பல்கலைக்கழக வளாகம் முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புல்லாவின் குடும்பத்திற்கு சொந்தமானது என்பது இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.

No comments: