இன்று (08) அதிகாலை மட்டக்களப்பு நோக்கி பயணித்த சிறிய ரக வேன் மாடொன்றுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
கிண்ணியாவிலிருந்து மட்டக்களப்பு நோக்கி பயணித்த குறித்த வேன் மூதூர் இறால் குழிப்பாலத்துக்கு முன்பாக மாடொன்று திடீரென பாய்ந்ததால் இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்தில் காயமடைந்த மூன்று மாணவிகள் மற்றும் வாகனத்தின் சாரதியும் மூதூர் தளவைத்தியாசலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து தொடர்பான விசாரணைகளை மூதுார் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.











No comments: