மட்டக்களப்பு போரதீவுப்பற்று பிரதேச செயலகத்திற்குட்பட்ட விவேகானந்தபுரம் விளையாட்டு கழகத்திற்கு இராசமாணிக்கம் மக்கள் அமைப்பினால் விளையாட்டுசீருடை வழங்கி வைக்கப்பட்டது.
இந் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய இரா.சாணக்கியன்...
இந்த தமிழர்களின் உரிமை மீட்பு போராட்டத்திற்கு பல போராளிகளை கொடுத்த பிரதேசம். தற்போது இளைஞர்கள் தடம் மாறி செல்கின்றனர். தமிழ் தேசிய உணர்வோடு பயணித்த பல தளபதிகளை போராட்டத்திற்கு அனுப்பி வைத்த பிரதேசமும் கூட. கடந்த காலங்களில் துரதிஷ்ட வசமாக நானும் குறுகிய காலம் பாதை மாறியிருந்தாலும் எனது தாய் வீடு தமிழரசு கட்சிதன்.
எந்தவிதமான பேரின கட்சிகளாலும் தமிழராகிய எமக்கு குண்டூசி அளவு கூட உரிமை தருவதற்கு தயாரில்லை. இதனை பெறுவதற்கு ஒரே ஊடகம் தமிழ் தேசிய கூட்டமைப்புதான். ஆகவே இளைஞர்களாகிய நீங்கள் தடம் மாறாமல் எமது இலட்சிய பாதை நோக்கி பயணித்து இலக்கை அடைய வேண்டும் என தெரிவித்தார்.
இளஞ்சுடர் விளையாட்டுக்கழகம் விடுத்த வேண்டுகோளின் பிரகாரம் எமது அமைப்பின் விளையாட்டுக்கழகங்களை மேம்படுத்தல் திட்டத்தினூடாக இச் சீருடைகள் வழங்கி வைக்கப்பட்டதாகவும் இராசமாணிக்கம் மக்கள் அமைப்பின் தவிசாளர் இரா.சாணக்கியன் இதன்போது தெரிவித்தார்.
3/08/2020 08:46:00 AM
Home
/
உள்ளூர்
/
மட்டக்களப்பு
/
தளபதிகளை கொடுத்த பிரதேசம் தடம் மாறிவிடக் கூடாது-கூட்டமைப்பை பலப்படுத்துமாறு சாணக்கியன் அறைகூவல்
தளபதிகளை கொடுத்த பிரதேசம் தடம் மாறிவிடக் கூடாது-கூட்டமைப்பை பலப்படுத்துமாறு சாணக்கியன் அறைகூவல்
Subscribe to:
Post Comments (Atom)


No comments: