News Just In

3/07/2020 05:49:00 PM

கிரான்குளம் கல்வி அபிவிருத்திச் சங்க பரிசளிப்பு விழா நிகழ்வுகள்

கிரான்குளம் கல்வி அபிவிருத்திச் சங்க பரிசளிப்பு விழா நிகழ்வுகள் இன்று சனிக்கிழமை (07) கிரான்குளம் சீ மூன் காடன் (Sea Moon Garden) மண்டபத்தில் கிரான்குளம் கல்வி அபிவிருத்திச் சங்க தலைவர் சி.புவனேந்திரன் தலைமையில் நடைபெற்றது.

இந் நிகழ்விற்கு பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி கலாமதி பத்மராஜா, விசேட அதிதிகளாக மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி ந.சத்தியானந்தி, மட்டக்களப்பு கல்வி வலய பணிப்பாளர் திருமதி சு.குலேந்திரகுமார்,

சிறப்பு அதிதிகளாக மட்டக்களப்பு கல்வி வலய பிரதிக்கல்வி பணிப்பாளர் க.ஹரிஹரராஜ், மண்முனைப்பற்று கோட்டக்கல்வி பணிப்பாளர் ஆர்.ஜே.பிரபாகரன் மற்றும் கௌரவ அதிதிகள், மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

இந் நிகழ்வில் கிரான்குளம் கிராமத்தில் அமைந்துள்ள  கிரான்குளம் சரஸ்வதி வித்தியாலயம், கிரான்குளம் விநாயகர் வித்தியாலயம், மற்றும் தர்மபுரம் தர்மரெட்ணம் வித்தியாலயம் ஆகிய மூன்று பாடசாலைகளில் இருந்து

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் சித்திபெற்ற, சாதாரணதரத்தில் சித்தி பெற்று உயர்தரத்திற்கு தகுதிபெற்ற மற்றும் கிரான்குளம் கிராமத்தில் இருந்து பல்கலைக்கழகத்திற்கு தெரிவான மாணவர்கள் கௌரவிக்கப்பட்டார்கள்.





































No comments: