News Just In

3/07/2020 05:24:00 PM

மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்தில் இடம்பெற்ற கணக்காய்வு முகாமைத்துவம் தொடர்பான செயலமர்வு

(எஸ்.சதீஸ்)
மட்டக்களப்பு மேற்கு கல்விவலயத்திலுள்ள பாடசாலை அதிபர்கள், வலயக்கல்வி உத்தியோகத்தர்களுக்கான கணக்காய்வு முகாமைத்துவம் தொடர்பான ஒருநாள் பயிற்சியுடனான செயலமர்வு இன்று குறிஞ்சாமுனையில் நடைபெற்றது.

வலயக்கல்விப் பணிப்பாளர் சிவானந்தம் சிறிதரன் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் தேசிய கணக்காய்வு அத்தியட்சகர் ஏ.எம். மாஹிர் வளவாளராக கலந்துகொண்டார்.

இதன்போது இச் செயலமர்வில் சுமார் 105 போர் கலந்துகொண்டதுடன், பாடசாலைகள் மற்றும் கல்வி அலுவலகம் போன்றவற்றில் இடம்பெறும் கணக்கு நடவடிக்கைகள் தொடர்பிலான ஐயங்களுக்கு கணக்காய்வு அத்தியட்சகர் விளக்கமளித்தார்.

No comments: