ஏறாவூர்ப்பற்று பிரதேசத்தில் தென்னிலங்கை மண் கம்பனிகளுக்கு வழங்கப்பட்ட அனுமதிப்பத்திரம் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் சிவ.சந்திரகாந்தன் (பிள்ளையான்) அவர்களின் தலையீட்டினால் உடன் நிறுத்தப்பட்டுள்ளது.
மண் ஏற்றுமதிக்காக அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டதையடுத்து எழுந்த மக்களின் எதிர்ப்புணர்வுகளையும், கோரிக்கைகளையும் ஏற்ற தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் சிவ.சந்திரகாந்தன்(பிள்ளையான்) உடனடியாக கட்சிச் செயலாளர் பூ.பிரசாந்தனுக்கு இது தொடர்பில் நடவடிக்கை எடுக்குமாறு பணித்துள்ளார்.
அவரின் பணிப்புரைக்கிணங்க, உடனடியாக செயற்பட்ட கட்சிச் செயலாளர் பூ.பிரசாந்தன், அமைச்சர் சமல் ராஜபக்ஷவுடன் தொடர்பு கொண்டார். இதற்கமைய, உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் மண் ஏற்றுவதற்காக வழங்கப்பட்ட அனுமதிப்பத்திரம் இரத்து செய்யப்பட்டதுடன் அதற்கான கடிதமும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)


No comments: