இன்று (08) காலை வீதி ஓரத்தில் விசேட அதிரடிப் படையினரால் ஷெல் ஒன்று மீட்கப்பட்டு செயலிழக்கச் செய்யப்பட்டுள்ளது. குறித்த சம்பவமானது வவுனியா, மரக்காரம்பளை பகுதியில் இடம்பெற்றுள்ளது.
வீதியின் அருகில் சந்தேகத்துக்கிடமான பொருள் ஒன்றை அவதானித்த பொதுமக்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில் குறித்த இடத்திற்கு சென்ற பொலிஸார் பாதுகாப்பை பலப்படுத்தி விசேட அதிரடிப் படையினருக்கு தகவல் வழங்கினர்.
இதனைத் தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு வந்த மடுகந்தை விசேட அதிரடி படையினர் குறித்த வெடிபொருளினை செயலிழக்கச் செய்தனர்.
3/08/2020 05:11:00 PM
வீதி ஓரத்திலிருந்து ஷெல் ஒன்று விசேட அதிரடிப் படையினரால் மீட்பு!
Subscribe to:
Post Comments (Atom)




No comments: