கடந்த பாராளுமன்றத்தினை பிரதிநிதித்துவப்படுத்திய இலங்கை தமிழரசுக் கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் 10 பேர் மீண்டும் இம்முறை பொதுத்தேர்தலில் களமிறக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கொழும்பில் இடம்பெற்ற இலங்கை தமிழரசுக் கட்சியின் வேட்பாளர் நியமனக்குழு கூட்டத்திலே இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.
இதன்படி ஞா.ஶ்ரீநேசன், சீ.யோகேஸ்வரன், மாவை சேனாதிராஜா, எம்.ஏ.சுமந்திரன், எஸ்.சிறீதரன், சார்ள்ஸ் நிர்மலநாதன், ஈ.சரவணபன் மற்றும் எஸ்.சிவமோகன் ஆகியோர் இந்த முறையும் பொதுத்தேர்தலில் போட்டியிடவுள்ளனர்.
இதேவேளை, தமிழ் தேசியக் கூட்டமைப்பு கொழும்பு தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடுவது தொடர்பில் இதுவரை இறுதி முடிவு எட்டப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments: