News Just In

2/13/2020 08:12:00 PM

நாவிதன்வெளி பிரதேச மாணவர்களுக்கான இலவச கல்வி அபிவிருத்தி செயற்திட்டம்


2021 ஆம் ஆண்டு க.பொ.த (சா/த) பரீட்சைக்குத் தோற்றவிருக்கும் மாணவர்களின் கணித பாட சித்தியினை அதிகரிக்கும் நோக்கில் நாவிதன்வெளி அமுதசுரபி சமூக அபிவிருத்தி அமைப்பால் பரீட்சைக்குத் தோற்றவிருக்கும் மாணவர்களுக்கும் அவர்களின் பெற்றோர்களுக்கும் இச்செயற்திட்டம் தொடர்பான தெளிவூட்டல் நிகழ்வொன்று அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் தே. கிறிஷாந் அவர்களின் தலைமையில் கடந்த 09.02.2020 ஆம் திகதியன்று நாவிதன்வெளி – 01 பல்தேவைக் கட்டிடத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் கமு / சது / நாவிதன்வெளி அன்னமலை மகா வித்தியாலய அதிபர் திரு. சீ. பாலசிங்கன் , அமைப்பின் ஆலோசகரான திரு. ரா. நிர்மலரூபன் , கணிதபாட ஆசிரியர் திரு. வ. புவனேஸ்வரன் , மாணவர்கள் மற்றும் மாணவர்களின் பெற்றோர்கள்; பங்குபற்றினர்.

இத்திட்டத்திற்கான நிதியுதவியினை திரு. கா. பன்னீர்ச்செல்வம் (மாலைதீவு) , திரு. க. பகீரதன் (கனடா) , திரு. ச. குவேந்திரா (குவைத்) , திரு. செ. ஜேசுதாசன் (குவைத்) , திரு. த. விபுலானந்தன் (இத்தாலி) ஆகியோர் வழங்குகின்றனர். இத்திட்டத்தில் இணைந்துகொள்ள விரும்பும் மாணவர்கள் எதிர்வரும் 16.02.2020 ஆம் திகதியன்று நாவிதன்வெளி – 01 பல்தேவைக் கட்டிடத்தில் நடைபெற்றவுள்ள இரண்டாவது கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.  கடந்த 2017 இல் ஆரம்பிக்கப்பட்ட  இச்செயற்திட்டத்தில் அதிகமான மாணவர்கள் பங்குபற்றியதோடு க.பொ.த (சா/த) – 2018 பரீட்சையில் சிறந்த சித்திகளைப் பெற்றமை குறிப்பிடத்தக்கது.







No comments: