வேலைவாய்ப்புக்கான நியமனங்கள் வழங்கப்படும்போது உள்வாரி மற்றும் வெளிவாரிப் பட்டதாரிகள் என வேறுபாடு காட்டப்படமாட்டாது என கல்வி அமைச்சர் டளஸ் அழகப்பெரும தெரிவித்தார்.
அத்துடன், வேறுபாடுகளுக்கு அப்பால் அனைத்து பட்டதாரிகளுக்கும் தகுதி, பயிற்சி அடிப்படையில் நிரந்தர நியமனங்கள் வழங்கப்படும் என அவர் உறுதியளித்துள்ளார்.
திஹகொட பிரதேசத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
மேலும், “54 ஆயிரம் பட்டதாரிகளுக்கும், குறைந்த வருமானம் பெறும் சாதாரண தரப் பரீட்சையில் தோல்வியடைந்த ஒரு இலட்சம் பேருக்கும் அரச தொழில் வாய்ப்புக்களைப் பெற்றுக் கொடுப்பதற்கான பயிற்சி மார்ச் முதலாம் திகதி தொடக்கம் முன்னெடுக்கப்படும்.
அத்துடன் ஒரு இலட்சம் பேருக்கு அரச தொழில் வாய்ப்புக்களை வழங்கும் பயிற்சி நடவடிக்கைகள் எதிர்வரும் மார்ச் முதலாம் திகதி தொடக்கம் முன்னெடுக்கப்படும்.
இதனை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனது தேர்தல் கொள்கைப் பிரகடனத்தில் குறிப்பிடவில்லை. ஆனாலும் பொது விடயங்களைக் கருத்திற்கொண்டு பல விடயங்கள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. ஜனாதிபதி தேர்தல் காலத்தில் குறிப்பிடப்பட்ட வாக்குறுதிகள் அனைத்தும் முழுமைப்படுத்தப்படும்” என அவர் கூறியுள்ளார்.

No comments: