சௌபாக்கியத்தின் தொலைநோக்கு கொள்கை பிரகடனத்திற்கு இணங்க பட்டதாரிகளுக்கு தொழில் வழங்கும் அரசாங்க வேலைத்திட்டத்தின் கீழ் 18 ஆயிரம் ஆசிரியர் நியமனங்களை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
பட்டதாரிகளுக்கு வழங்கப்படும் 54 ஆயிரம் தொழில் வாய்ப்புக்களில் 18 ஆயிரம் நியமனங்கள் ஆசிரியர் நியமனங்களாகும் என கல்வி, விளையாட்டுத்துறை, இளைஞர் அலுவல்கள் அமைச்சர் டளஸ் அழகப்பெரும தெரிவித்தார்.
திஹகொட பிரதேசத்தில் இடம்பெற்ற கூட்டமொன்றில் உரையாற்றும் போதே அமைச்சர் இந்தக் கருத்துக்களை வெளியிட்டார். உள்வாரி வெளிவாரி பட்டதாரிகள் என கருத்திற் கொள்ளாமல் அனைத்து பட்டதாரிகளுக்கும் தொழில் வழங்கப்படும் என அமைச்சர் தெரிவித்தார்.

No comments: