News Just In

2/12/2020 10:02:00 AM

திராய்மடு பிரதேச மாணவர்களுக்கு மாநகர சபையால் கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு

மாணவர்களின் கல்வி தரத்தினையும், அவர்களின் கற்றலின் மீதான ஆர்வத்தினையும் அதிகரிக்கும் நோக்கில் மட்டக்களப்பு மாநகர சபையினால் (11.02.2020) கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன.

மட்டக்களப்பு மாநகர சபைக்குட்பட்ட புறநகர் பகுதிகளில் வசிக்கும் வறிய மாணவர்களை ஊக்குவிக்கும் விதத்திலும், இடைவிலகல்களை குறைத்து, மாணவர்களுக்கு கற்றலின் மீதான ஆர்வத்தினையும் அதிகரிக்கும் நோக்கில் மட்டக்களப்பு மாநகர சபையினால் முன்னெடுக்கப்பட்டு வரும் கல்வி அபிவிருத்தி செயற்றிட்டத்தின் ஓர் அம்சமாக கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டு வருகின்றன.

இதன்படி மட்டக்களப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட நாவலடி நாமகள் வித்தியாலயம் மற்றும் திராய்மடு தமிழ் மகா வித்தியாலயங்களில் கல்வி கற்றுவரும் மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்களை மட்டக்களப்பு மாநகர முதல்வர் தியாகராஜா சரவணபவன் வழங்கி வைத்தார்.

பாடசாலைகளின் அதிபர்களின் தலைமையில் இடம்பெற்ற வெவ்வேறு நிகழ்வுகளில் மட்டக்களப்பு மாநகர சபையின் பிரதி முதல்வர் க.சத்தியசீலன், மாநகரசபை உறுப்பினர்களான ஐ.சிறிதரன், பு.ரூபாராஜ், க.ரகுநாதன், பற்றிமா பல்தஸார் ஆகியோருடன் மாநகர சழுக மேம்பாட்டு உத்தியோகத்தர் ச.சந்திரகுமார் மற்றும் ஆசிரியர்கள், பெற்றோர்கள், பழைய மாணவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டு மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்களை வழங்கி வைத்தனர்.




















No comments: