News Just In

2/13/2020 01:14:00 PM

சமாதானத்தை உருவாக்க மட்டக்களப்பில் இடம்பெறவுள்ள இளைஞர் அணிகளுக்கான பயிற்சிச் செயலமர்வு!

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்-
எல்லைக் கிராமங்களில் சமூகங்களிடையே சமாதானத்தையும் மத சுதந்திரத்தையும் சகவாழ்வையும் வலுப்படுத்துவதற்காக தாம் வதிவிடப் பட்டறைப் பயிற்சிகளை நடாத்தி வருவதாக மட்டக்களப்பு மாவட்ட அரச சார்பற்ற ஒன்றியங்களின் அமைப்பான இணையத்தின் மாட்ட ஒருங்கிணைப்பாளர் எஸ்.பி. பிரசன்யா தெரிவித்தார்.

இது தொடர்பாக மேலும் தெரிவித்த அவர்,
சமாதானத்தைக் கட்டியெழுப்பும் மற்றொரு முயற்சியாக நம்மால் பயிற்சியளிக்கப்பட்ட இளைஞர் அணிகள் மட்டக்களப்பு மாவட்ட சமாதான அமைப்பில் முக்கிய சமாதான ஆர்வலர்களாக களத்தில் பணியாற்றவுள்ளார்கள் என்றும் கூறினார்.

அந்த வகையில் தன்னார்வ தொண்டு சமூக சேவை அமைப்புக்களில் பணியாற்றுவோருக்கும் பல்கலைக் கழகங்களில் கற்கும் இளையோருக்குமான மேலும் ஒரு பயிற்சிச் செயலமர்வு எதிர்வரும் 22ஆம் திகதி காலை 9 மணி தொடக்கம் பிற்பகல் 2 மணிவரை மட்டக்களப்பு ஊறணி அமெரிக்க மிஷன் பயிற்சிக் கேட்போர் கூடத்தில் இடம்பெற ஏற்ற ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

எனவே, சமூகங்களுக்கிடையே இவ்வாறான சமாதான சகவாழ்வைக் கட்டியெழுப்புவதில் ஆர்வமுள்ள இள வயதினர், இன ஐக்கிய சமாதான செயற்பாட்டுத் திட்டங்களில் தங்களையும் இணைத்துக் கொண்டு பணியாற்ற முடியும்.

அத்தகைய ஆர்வமுள்ளோர் குறிப்பாக பல்கலைக் கழக மாணவர்கள் மாவட்ட ஒருங்கிணைப்பாளரான தனது 0761268220 என்ற தொலைபேசி இலக்கத்தோடு தொடர்பு கொண்டு பயிற்சிகளில் இணைந்து கொள்ளுமாறு பிரசன்யா கேட்டுக் கொண்டுள்ளார்.

No comments: