News Just In

1/21/2020 12:53:00 PM

மட்டக்களப்பில் பட்டதாரிகள் கையெழுத்து வேட்டை-நியமனங்களை துரிதப்படுத்துமாறு கோரி ஆளுநரோடு சந்திப்பு

மட்டக்களப்பு பட்டதாரிகள் சங்கத்தினரால் இன்று காந்தி பூங்காவில் கையெழுத்து இடும் நிகழ்வு ஆரம்பித்து வைக்கப்பட்டது. மட்டு பட்டதாரிகள் சங்கத் தலைவர் க.அணிதன் தலைமையில் ஆரம்பமான இந்த நிகழ்வில் பல பட்டதாரிகள் கலந்து கொண்டனர்.

தற்போது உள்ள அரசாங்கத்திடம் பட்டதாரிகளின் நியமனத்தை துரிதப்படுத்துமாறும், பட்டதாரிகளை முன்னுரிமைப்படுத்துமாறும் கோரி இக் கையெழுத்து வேட்டை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இன்றிலிருந்து மூன்று நாட்கள் நடைபெறும் இக் கையெழுத்து நிகழ்வில் பட்டதாரிகள் அனைவரும் பங்குகொள்ள முடியும்.

கையெழுத்து படிவத்தினை முன்னுரிமைப் படுத்தி அதில் உள்ள பட்டதாரிகளின் நியமனங்களை துரித்தபடுத்துமாறு கோரி இவ் ஆவணம் கிழக்கு மாகாண ஆளுநரிடம் சந்திப்பு ஒன்றை மேற்கொண்டு  கையளிக்கப்படவுள்ளது.
















No comments: