
மட்டக்களப்பு-கல்லடி விவேகானந்த மகளிர் கல்லூரி ஸ்தாபகர் தினமும் 111 ஆவது ஆண்டு கல்லூரி தினமும் இன்று பாடசாலையில் அதிபர் திருமதி நவகீதா தர்மசீலன் தலைமையில் கொண்டாடப்பட்டது.
முதன்மை அதிதிகளாக பாடசாலையினை ஸ்தாபித்த கதிர்காமத்தம்பி உடையார், சபாபதிப்பிள்ளை உடையார் ஆகியோரின் குடும்ப உறுப்பினர்களான ந.ஹரிதாஸ் , நா.ரகுகரன் ஆகியோர் கலந்துகொண்டதுடன்.
உதவிக்கல்விப் பணிப்பாளர் லவக்குமார், ஒய்வு பெற்ற அதிபர் திருமதி ஹரிதாஸ், பாடசாலையின் வளர்சிக்கு அரும்பணி செய்யும் சீனித்தம்பி லீலாவதி அம்மணி அவர்களும் மற்றும் ஆசிரியர்கள் மாணவர்கள் எனப் பலர் கலந்துகொண்டனர்.
அதிதிகள் மாலை அணிவித்து வரவேற்க்கப்பட்டதுடன், ஸ்தாபகர்களின் உருவச் சிலைகளுக்கு மலர் மாலை அணிவித்தல், கொடியேற்றுதல், பாடசாலைக்கீதம், அதிதிகள் உரை, மாணவர்கள் அரங்க நிகழ்வுகள், மாணவ தலைவர்களுக்கு சின்னம் சூட்டுதல் ஆகிய நிகழ்வுகளுடன் பாடசாலை தினத்தினை கொண்டாட சம்ரதாய பூர்வமாக மேற்கொண்டு வரும் வெண் பொங்கல் வெட்டி பகிரும் நிகழ்வும் நடைபெற்றது.
நிகழ்வின் விசேட அம்சமாக பாடசாலையின் வளர்சிக்கு அரும்பணி செய்யும் குடும்பத்தினை சேர்ந்த தாயார் சீனித்தம்பி லீலாவதி அம்மணி அவர்களுக்கு பாடசாலை நிருவாக்கத்தினரால் கௌரவம் வழங்கப்பட்டது.


































No comments: