News Just In

1/13/2020 11:59:00 AM

துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் கொலை-சந்தேகத்தில் முன்பள்ளி ஆசிரியை கைது!

துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட முன்பள்ளி ஆசிரியை ஒருவரை இன்றுவரை விளக்கமறியலில் வைக்குமாறு வெல்லவாய நீதிவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

கடந்த 10 ஆம் திகதி துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட நபரொருவரின் சடலமொன்று சமாதிகம பிரதேசத்தில் தனமல்வில பொலிஸாரால் மீட்கப்பட்டிருந்தது. குறித்த நபர் தலையில் துப்பாக்கியால் சுடப்பட்டதால் உயிரிழந்திருந்ததாக ஆரம்பக்கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்திருந்தது.

சம்பவம் தொடர்பான விசாரணைகளையடுத்து, திருமணத்துக்கு அப்பாலான தொடர்பினை உயிரிழந்த நபருடன் பேணி வந்த சந்தேகத்தின் பேரில் அதேபிரதேசத்தைச் சேர்ந்த முன்பள்ளி ஆசிரியை பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்தார்.

தனதமல்வில, சமாதிகம பகுதியைச் சேர்ந்த 35 வயதான குறித்த பெண்ணிடமிருந்து கைப்பேசி ஒன்றை மீட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர் வெல்லவாய நீதிவான் முன்னிலையில் ஆஜர்ப்படுத்தப்பட்டதையடுத்து அவரை விளக்கமறியலில் வைக்க நீதிவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் தனமல்வில பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

No comments: