News Just In

1/11/2020 08:11:00 AM

பல்கலைக்கழக சம்பள முரண்பாட்டை நீக்க குழு-பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ

பல்கலைக்கழக கட்டமைப்பில் நிலவும் சம்பள முரண்பாட்டை நீக்குவதற்கு குழுவொன்றை நியமிப்பது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.

பல்கலைக்கழக தொழிற்சங்க பிரதிநிதிகளுக்கும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்குமிடையில் அலரி மாளிகையில் பேச்சுவார்தை நடைபெற்றது.

இந்த பேச்சுவார்தையின் போது பல்கலைக்கழக கட்டமைப்பில் நிலவும் சம்பள முரண்பாடு சம்பந்தமாக விரிவாக ஆராய்ந்து அதற்கு தீர்வைப் பெற்றுத்தருவதாக பிரதமர் தெரிவித்துள்ளார்.

சம்பள முரண்பாட்டை நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நிதியமைச்சின் செயலாளருக்கும் ஆலோசனை வழங்கினார்.

No comments: