News Just In

1/11/2020 03:47:00 PM

பல்கலை மாணவர்களுக்கு புலமைப்பரிசில் கொடுப்பனவு-அரசாங்கத்தின் அறிவிப்பு


பல்கலைக்கழக மாணவர்களுக்கு மஹாபொல புலமைப்பரிசில் கொடுப்பனவை ஒவ்வொரு மாதமும் 15ம் திகதி வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (சனிக்கிழமை) காலை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்த்தன இந்த விடயம் தொடர்பாக தெரிவித்துள்ளார்.

மஹாபொல மற்றும் புலமைப்பரிசில் நிலுவைப் பணம் எதிர்வரும் வாரத்தில் வழங்கப்படும். அதேபோன்று பல்கலைக்கழக மாணவர்களுக்கு மஹாபொல புலமைப்பரிசில் கொடுப்பனவை ஒவ்வொரு மாதமும் 15ம் திகதி வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி செயலகத்திற்கு சமீபத்தில் ஊர்வலமாக வந்த மாணவ பிரதிநிதிகளுடன் அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தையில் இது தொடர்பாகத் தீர்மானிக்கப்பட்டதாகவும் உயர்கல்வி அமைச்சர் குறிப்பிட்டார்.

மஹாபொல புலமைப்பரிசில் தொகை 10 ஆயிரம் ரூபாய் வரையில் அதிகரிக்குமாறு மாணவர்கள் கோரியிருந்தனர். இது குறித்து தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் உயர்கல்வி அமைச்சர் குறிப்பிட்டார்.

மஹாபொல நிதியத்திற்கு மேலதிகமாக அரசாங்கம் ஒவ்வொரு மாதமும் மஹாபொல புலமைப் பரிசிலுக்காக 200 மில்லியன் ரூபாயை ஒதுக்கீடு செய்கின்றது என்றும் அமைச்சர் கூறினார்.

No comments: