News Just In

1/13/2020 11:10:00 AM

டெங்கு நோய்க்கு இலக்கான 3 பிள்ளைகளின் தந்தையான பொலிஸ் உத்தியோகத்தர் பலி


டெங்கு நோய்க்கு இலக்கான பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் மன்னார் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.

மன்னார் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய மதவாச்சி ஹெத்தாகட ஹெட்ட வீரகொல்லாவ பகுதியைச் சேந்த மூன்று பிள்ளைகளுக்கு தந்தையான பி.சீ.பியரத்தின (வயது 45) என்பவரே டெங்கு நோய்க்கு இலக்காகி உயிரிழந்த பொலிஸ் உத்தியோகத்தராவார்.

இவர் காய்ச்சல் என தெரிவித்து கடந்த 10 ஆம் திகதி (10.01.2020) மன்னார் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையிலேயே சிகிச்சை பயனளிக்காத நிலையில் ஞாயிற்றுக் கிழமை (12.01.2020) பிற்பகல் மரணத்தை தழுவிக் கொண்டார்.

இவரின் மரண விசாரணையை முசலி மரண விசாரணை அதிகாரி ஏ.ஆர் நசீர் மேற்கொண்டபின் சடலம் அவரின் உறவினரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் மேலும் நான்கு பொலிஸ் உத்தியோகத்தர்கள் காய்ச்சல் பீடிக்கப்பட்ட நிலையில், மன்னார் பொதுவைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் அவர்களும் டெங்கு நோய்க்குள்ளாகியுள்ளனரா என பரிசோதனைக்குள்ளாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

No comments: