மின்சார ஒழுக்கினால் ஏற்பட்ட தீயின் புகையினால் மூச்சுத் திணறி இம்மாணவிகள் உயிரிழந்துள்னர் என சபைல் பொலிஸார் தெரிவித்துள்ளனர். மத்திய ஆசிய நாடான அஸர்பைஜனானின் பாகு பிராந்தியத்தின் சபைல் மாவட்டத்திலுள்ள பாயில் நகரில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
உயிரிழந்தவர்கள் தகவல் தொழில்நுட்பம் தொடர்பிலான பட்டப் படிப்பை முன்னெடுத்து வந்த பிலியந்தலை பகுதியைச் சேர்ந்த ஒரே குடும்பத்தின் சகோதரிகளான 23 வயதுடைய அமாயா, 21 வயதுடைய மாலனி ஆகியோரும் 25 வயதுடைய கடுவலை பகுதியைச் சேர்ந்த துஷி ஜயகொடி என்பவருமே உயிரிழந்துள்ளதாக அறியமுடிகின்றது.
இதில் 21,23 வயதுகளை உடைய சகோதரிகள் இருவரும் கடந்த 2019 ஜூலை 16 ஆம் திகதி அஸர்பைஜானிக்கு சென்றுள்ளதாகவும், உயிரிழந்த மூன்று மாணவிகளும் குறித்த தொடர்மாடியில் கடந்த இரு மாதங்களாகவே தங்கியிருந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்து
ஒரே குடும்பத்தை சேர்ந்த சகோதரிகள் உயிரிழந்த செய்தி கேட்டு அதிர்ச்சியை தாங்க முடியாமல் குறித்த சகோதரிகளின் தந்தையின் சகோதரி மாரடைப்பால் உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


No comments: