News Just In

12/25/2019 09:38:00 AM

இந்த தசாப்தத்தின் சிறந்த ஒருநாள் அணி தலைவராக MS தோனி தேர்வு!

உலகக் கோப்பை வென்ற இந்திய கிரிக்கட் அணியின் நட்சத்திர வீரர் MS தோனி, Cricket Australia தொகுத்த தசாப்தத்தின் சிறந்த ஒருநாள் அணியின் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்

இலங்கை அணி சார்பில் லசித் மலிங்க தெரிவு செய்யப்பட்டுள்ளார். இந்த அணியில் தோனியை தவிர 3 இந்தியர்கள் இடம்பெற்றுள்ளனர். MS தோனியைத் தவிர, இந்திய கேப்டன் விராட் கோலி, தொடக்க ஆட்டக்காரர் ரோஹித் சர்மா ஆகியோரும் இந்த தசாப்தத்தின் அணியில் இடம் பெறுகின்றனர்.

கிரிக்கட் அவுஸ்திரேலியாவுக்கான ஆண்டின் ஒருநாள் அணியை தொகுத்த பத்திரிகையாளர் மார்ட்டின் ஸ்மித், இந்தியாவின் வரையறுக்கப்பட்ட ஓவர்கள் கிரிக்கட்டின் "பொற்காலத்தில்" MS தோனி ஒரு மேலாதிக்க சக்தியாக இருந்தார் என்று கூறியுள்ளார். மேலும், மார்ட்டின் ஸ்மித் விராட் கோலியை தசாப்தத்தின் "சிறந்த ஒருநாள் துடுப்பாட்ட வீரர்" என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தசாப்தத்தின் ஒருநாள் அணி
MS தோனி (கேப்டன் மற்றும் விக்கெட் கீப்பர்), ரோஹித் சர்மா, ஹாஷிம் அம்லா, விராட் கோலி, ஏபி டிவில்லியர்ஸ், ஷாகிப் அல் ஹசன், ஜோஸ் பட்லர், ரஷீத் கான், மிட்செல் ஸ்டார்க், ட்ரெண்ட் போல்ட், லசித் மலிங்க

தசாப்தத்தின் டெஸ்ட் அணி:
விராட் கோலி (கேப்டன்), அலெஸ்டர் குக், டேவிட் வார்னர், கேன் வில்லியம்சன், ஸ்டீவ் ஸ்மித், ஆப் டிவில்லியர்ஸ் (விக்கெட் கீப்பர்), பென் ஸ்டோக்ஸ், டேல் ஸ்டெய்ன், ஸ்டூவர்ட் பிராட், நாதன் லியோன், ஜேம்ஸ் ஆண்டர்சன்.

No comments: