News Just In

12/03/2019 02:05:00 PM

போரதீவுப்பற்றுப் பிரதேச சபையின் பாதீடு எதிர்ப்பின்றி ஏகமனதாக நிறைவேற்றம்


(ஏ.எச்.ஏ. ஹுஸைன்)

போரதீவுப்பற்று பிரதேச சபையின் 2020ஆம் ஆண்டுக்கான பாதீடு எதிர்ப்பின்றி ஏகமனதாக நிறைவேற்றப்பட்டதாக அப்பிரதேச சபையின் தலைவர் யோகநாதன் ரஜினி தெரிவித்தார்.

அடுத்தாண்டுக்கான போரதீவுப் பிரதேச சபையின் பாதீடு செவ்வாய்க்கிழமை 03.12.2019 சபையில்  சமர்ப்பிக்கப்பட்டது.

பிரதேச சபைத் தலைவர் தலைமையில் பாதீடு சபையில் சமர்ப்பிக்கப்பட்டபோது ஆளுந் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் சேர்ந்து அச்சபையில் அங்கத்துவம் வகிக்கும் அனைத்து உறுப்பினர்களும் எதிர்ப்பின்றி ஏகமனதாக பாதீட்டுக்கு ஒப்புதல் அளித்துள்ளனர்.

போரதீவுப்பற்றுப் பிரதேச சபையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் 8 பேரும், ஐக்கிய தேசியக் கட்சி 3, தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி 2, சுயேட்சைக் குழுக்கள் 2, தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணி 1, தமிழர் விடுதலைக் கூட்டணி 1 என மொத்தம் 18 பேர் உறுப்பினர்களாக உள்ளார்கள்.



No comments: