
மட்டக்களப்பு உன்னிச்சை கிராமத்தில் திருவள்ளுவர் சிலை இன்று(3) வவுணதீவு பிரதேச சபை உறுப்பினர் சண்முகநாதன் குகநாதன் அவர்களின் நிர்மாணத்தின் வாயிலாக திறந்து வைக்கப்பட்டது.
இந் நிகழ்வில் பிரதம அதிதியாக பாராளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன் அவர்கள் கலந்து கொண்டதுடன், வவுணதீவு பிரதேச, மட்டு மாநகர உள்ளுராட்சி மன்றங்களின் உறுப்பினர்கள் ச.குகநாதன், என்.பத்மசிறி, எஸ்.கிருஷ்ணகுமார், ச.மோகன் ஆகியோரும்.
உன்னிச்சை கிராம அபிவிருத்திச் சங்கத்தின் தலைவர் ஆர்.விஜயரெட்ணம், செயலாளர் ரி.கோபிதரன், உன்னிச்சை விநாயகர் இளைஞர் கழகத் தலைவர் க.கலைரூபன் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.













No comments: