சூரியன், சந்திரன் மற்றும் பூமி ஆகிய மூன்றும் ஒரே நேர்கோட்டில் ஒரே நேரத்தில் வருவதே சூரிய கிரகணம் உண்டாக காரணம். அப்போது பூமி, சூரியன் ஆகிய இரண்டுக்கும் நடுவில் வரும் சந்திரன் சூரியனை பூமியில் இருந்து பார்க்க முடியாதபடி மறைக்கும்.
இதே போன்றதொரு சூரிய கிரகணம் 2031ம் ஆண்டு மே 16ஆம் திகதி நிகழும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
சூரிய கிரகணம் குறித்து யாழ். பல்கலைக்கழகம் விடுத்துள்ள அறிவிப்பு பின்வருமாறு:
நிகழவிருக்கும் சூரிய கிரகணம் இலங்கை நேரப்படி காலை 8.09 மணிக்கு ஆரம்பமாகி முற்பகல் 11.21 வரை இடம்பெறவுள்ளது. இந்த சூரிய கிரகணம் 3 மணித்தியாலயங்களும் 12 நிமிடங்களும் நீடிக்கும்.
அதிலும் 3 நிமிடங்களும் 8 வினாடிகளும் (09:35-09:38) மோதிர வடிவிலான கங்கண சூரிய கிரகணம் (Annular Solar Eclipse) இடம்பெறும். இந்த சூரிய கிரகணத்தை அவதானிப்பதற்கான ஏற்பாடுகளை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகமானது கொழும்பு பல்கலைக்கழகம், மேற்கு நோர்வே பிரயோக விஞ்ஞானப் பல்கலைக்கழகம், இலங்கையின் தொழில்நுட்பவியல் மற்றும் புத்தாக்கங்கள் இராஜாங்க அமைச்சு ஆகியவற்றுடன் இணைந்து மேற்கொண்டுள்ளது.
இந்த அரிய நிகழ்வினை அவதானிப்பதற்காக உள்நாட்டு வெளிநாட்டு கிரகண அவதானிப்பாளர்களும் விஞ்ஞானிகளும் ஆர்வம் கொண்டு யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்துள்ளனர்.
இதன் நிமித்தம் யாழ்ப்பாணத்திலும் கிளிநொச்சியிலும் உயர்ரக தொலைநோக்கு காட்டிகளுடன் கூடிய முகாம்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன.
நாடெங்கிலுமுள்ள பாடசாலைகளில் எட்டாம் தரம் முதல் கல்வி பொதுத் தராதர சாதாரண தரம் வரை கல்வி பயிலும் மாணவர்களுக்கு சூரிய கிரகணம் தொடர்பாக நடைபெற்ற தெரிவுப் பரீட்சையில் அதிகூடிய புள்ளிகளைப் பெற்ற மாணவர்கள் கௌரவிக்கப்படவுள்ளனர் என ஏற்பாட்டு குழுவினர் தெரிவித்திருக்கின்றனர்.
இச்சூரிய கிரகணத்தை இம்முகாமிற்கு வருகைதரும் ஆறாயிரத்திற்க்கும் மேற்பட்ட பொதுமக்கள் இதனைப் பாதுகாப்பான முறையில் பார்வையிட ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இணையவாயிலாக நாடேங்கிலுமுள்ள இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பதிவு செய்துள்ளார்கள். இதன் ஆர்வலர்கள் http://event.jfn.ac.lk/eclipse எனும் இணையதளத்தில் தமது பதிவை முற்கூட்டியே கொள்ளுமாறு ஏற்பாட்டு குழுவினர் கேட்டுக்கொள்கின்றார்கள்.
திருநெல்வேலியில் அமைந்துள்ள அவதான முகாமின் நிகழ்ச்சி நிரலை http://event.jfn.ac.lk/eclipse/ என்ற இணையத்தளத்தில் பார்வையிடலாம்.
P.Ravirajan
BSc Hons(Jaffna), MSc (Pera), DIC, PhD(London)
Senior Professor in Physics
Director/International Collaboration Unit
Coordinator/HRNCET-NORPART Project
Deputy Director / Edu-Training on Solar PV Project
Department of Physics, University of Jaffna
PO Box 57, Thirunelvely, Jaffna, JA 40, 000, Sri Lanka
Mobile: 0094 (0) 71 856 1715
E-mail: pravirajan@univ.jfn.ac.lk
http://project.jfn.ac.lk/hrncet/
https://www.scopus.com/authid/detail.uri?authorId=8161457500
https://orcid.org/0000-0002-9593-1806
http://scholar.google.com/citations?hl=en&user=l1wPmm8AAAAJ

No comments: