News Just In

12/26/2019 08:00:00 AM

மட்டக்களப்பில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கி வைத்த கிழக்கு மாகாண ஆளுநர்

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்-
மட்டக்களப்பு மாவட்டத்தில் மிகமோசமாகப் பாதிக்கப்பட்ட சித்தாண்டி பிரதேசத்திற்கு நேற்று புதன்கிழமை (25.12.2019) விஜயம் செய்த கிழக்கு மாகாண ஆளுநரும் தொழிலதிபருமான அனுராதா யஹம்பத் தலைமையிலான அதிகாரிகள் குழுவினர் அங்கு மக்களுக்கு உலருணவு நிவாரணங்களையும் வழங்கி வைத்தனர்.

நத்தார் தினமான புதன்கிழமை சித்தாண்டி முருகன் ஆலய வளாக பாடசாலைக் கட்டிடத்தில் வைத்து இந்த நிவாரணப் பொதிகள் 200 குடும்பங்களுக்கு வழங்கி வைக்கப்பட்டன.

இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்டச் செயலாளர் மாணிக்கம் உதயகுமார், மேலதிக அரசாங்க அதிபர் சுதர்சினி ஸ்ரீகாந்த், மாவட்ட இடர் முகாமைத்துவ உதவிப் பணிப்பாளர் ஏ.சி.எம். சியாத் உள்ளிட்ட அதிகாரிகள் குழுவினரும் உடனிருந்தனர்.

No comments: