இயற்கை அன்னை எமக்குப் பல கொடைகளை வழங்கியள்ளாள். நீர், நிலம், காற்று அவற்றில் முக்கியமானவை. ஆனால், அக் கொடைகள் சில சந்தர்ப்பங்களில் ஆழிப்பேரலையாக, பூகம்பமாக, சூறாவளியாகக் குமுறுவதுண்டு. அக் குமுறல்களினால் எமது உறவுகளின் உயிர்கள் பறிக்கப்படுவதுண்டு.
அந்த வகையில், 2004/12/26 அன்று எமது நாட்டில் ஏற்பட்ட ஆழிப்பேரலை அரக்கனின் கொடுஞ் செயலால் எமது மக்கள் பலரின் இன்னுயிர்கள் பறிக்கப்பட்டுள்ளன.
பறிக்கப்பட்ட உறவுகளின் ஆத்மாக்கள் சாந்தியடைவதற்காக மீண்டுமொரு தடவை நாம் அனைவரும் இறைவனைப் பிராத்தனை செய்வோம். மறைந்த எம் உறவுகளின் உறவுகள் ஆத்ம பலத்தினைப் பெறுவதற்காகவும் பிராத்திப்போம்.
உயிர் பறிக்கப்பட்ட உறவுகளே, உயிரோடு இருந்து நினைத்துருகும் உறவுகளே எல்லோருக்காகவும் இறைவனை வேண்டுகின்றேன்.
-ஞா.ஸ்ரீநேசன் MP-
12/26/2019 07:30:00 AM
ஆழிப்பேரலையால் உயிரிழந்த உறவுகளுக்காக இறைவனைப் பிரார்த்திப்போம்-ஞா.ஸ்ரீநேசன்
Subscribe to:
Post Comments (Atom)

No comments: