சுடுநீர் பாத்திரம் வீழ்ந்ததால் உடல் முழுவதும் எரிகாயங்களுக்குள்ளான குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளது.
நல்லிணக்கபுரம் கீரிமலை பகுதியைச் சேர்ந்த ஒரு வயதான ஆண் குழந்தையே இவ்வாறு உயிரிழந்தது.
சம்பவம் குறித்து தெரியவருவதாவது,
கடந்த 20 ஆம் திகதி வெள்ளிக்கிழமை மாலை குழந்தைக்கு பால் கரைப்பதற்கு சுடுநீரை தயாரித்த தாய் அப்பாத்திரத்தை மேசையின் விளிம்பில் வைத்து விட்டு பால்மா எடுக்க அறைக்கு சென்றுள்ளார்
மேசையின் விளிம்பில் சுடுநீர் பாத்திரம் வைக்கப்பட்டிருந்த நிலையில், குழந்தை மேசை விரிப்பு சீலையை இழுத்துள்ளது. இதனால் விளிம்பில் வைக்கப்பட்டிருந்த சுடுநீர் பாத்திரம் வீழ்ந்து குழந்தையின் உடல் எரிகாயங்களுக்குள்ளானது.
எரிகாயங்களுக்குள்ளான குழந்தை உடனடியாக தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அனுமதிக்கப்பட்ட நிலையில் நேற்று முன்தினமிரவு உயிரிழந்துள்ளதாக காங்கேசன்துறை பொலிஸார் தெரிவித்தனர்.
விசாரணைகளை வைத்தியசாலையின் திடீர் மரண அதிகாரி நமசிவாயம் பிரேம்குமார் மேற்கொண்டதுடன் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
12/29/2019 08:08:00 PM
Home
/
உயிரிழப்பு
/
உள்ளூர்
/
யாழ்ப்பாணம்
/
மேசையில் இருந்த சுடுநீர் பாத்திரம் வீழ்ந்ததால் குழந்தை மரணம்!
மேசையில் இருந்த சுடுநீர் பாத்திரம் வீழ்ந்ததால் குழந்தை மரணம்!
Subscribe to:
Post Comments (Atom)

No comments: