மட்டக்களப்பு சிறைச்சாலைக்குள் ஹரோயின் போதைப் பொருளை கொண்டு செல்ல முற்பட்ட சிறைச்சாலை உத்தியோகத்தர் ஒருவரை 35 மில்லிக்கிராம் போதைப் பொருளுடன் நேற்று திங்கட்கிழமை (23) இரவு கைது செய்துள்ளதாக மட்டக்களப்பு தலைமையக பொலிசார் தெரிவித்தனர்.
குறித்த சிறைச் சாலையில் கடமை புரியும் சிறைச்சாலை உத்தியோகத்தர் சம்பவதினமான நேற்று திங்கட்கிழமை அம்பாறை அக்கரைப்பற்று நீதிமன்றத்திற்கு வழக்கிற்கான சிறைக்கைதிகளை பஸ்வண்டியில் நீதிமன்றத்திற்கு அழைத்து சென்று பின்னர் சிறைச்சாலைக்குள் திரும்ப்பியுள்ளனர்.
இந்த நிலையில் வெளியில் சென்று சிறைச்சாலைக்கு இரவு திரும்பியுள்ள உத்தியோகத்தர்களை சிறைச்சாலை அதிகாரியினால் சோதனை மேற்கொண்ட போது அதில் ஒருவரிடம் 35 மில்லிக் கிராம் ஹரோயின் போதைப் பொருளை அவர் தன்வசம் மறைத்து வைக்கப்பட்டிருந்ததை கண்டுபிடித்தனர்
இதனையடுத்து குறித்த நபரை கைது செய்து பொலிசாரிடம் ஒப்படைத்தனர் இதில் கைது செய்யப்பட்டவர் பொலநறுவையைச் சோந்த 34 வயதுடையவர் எனவும் இவரை நீதிமன்றில் இன்று ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

No comments: