News Just In

12/08/2019 08:58:00 PM

சர்வதேச விருது பெற்று சாதனை படைத்த மட்டு-கல்லடி மாணவன் சக்திக்குமார் பிரஜித்

மட்டக்களப்பு கல்லடி வேலூர் சக்தி வித்தியாலயத்தில் தரம் 5 இல் கல்வி பயிலும் மாணவன் சக்திக்குமார் பிரஜித் கண்டுபிடித்த ஹம்மர் ஹெல்பெர் (Hammer Helper) தாய்வானில் கண்டுபிடிப்பாளர்களுக்கான சர்வதேச கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டு நல்ல வரவேற்பை பெற்றது.

பல நாடுகளில் இருந்து மாணவர்கள் தங்களது கண்டுபிடிப்பை இங்கு காட்சிப்படுத்தி இருந்தனர். பலத்த போட்டிகளுக்கு மத்தியில் சக்திக்குமார் பிரஜித்தின் கண்டுபிடிப்பு இரண்டாம் இடத்தை சுவீகரித்து கொண்டது.

இதன் மூலம் மாணவன் பிரஜித் தாய்வான் அரசால் வெள்ளிப்பதக்கம் வழங்கி கௌரவிக்கப்பட்டு நாட்டிற்கும் தனது பிரதேசத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார்.

இலங்கையில் விஞ்ஞானம் தொழிநுட்பம் மற்றும் ஆராய்ச்சி அமைச்சின் கீழ் இயங்கும் இலங்கை புத்தாக்குனர் ஆணைக்குவினால் வருடாவருடம் நடாத்தப்படும் சகசக் நெமவும் தேசிய கண்டுபிடிப்பாளர்களுக்கான போட்டியில் மாணவன் சக்திக்குமார் பிரஜித் கண்டுபிடித்த Hammer Helper முதலிடத்தையும் தங்கப்பதக்கத்தையும் பெற்றுக்கொண்டது.

தாய்வான் நாட்டில் சர்வதேச கண்டுபிடிப்பாளர்கள்  கண்காட்சியானது  டிசம்பர் 6,7,8 ஆம் திகதிகளில் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது .




No comments: