News Just In

12/08/2019 07:10:00 PM

அரசாங்கம் முஸ்லிம்களின் தேவைகளை நிறைவேற்றும்-பைசர் முஸ்தபா

அமைச்சரவையில் முஸ்லிம் உறுப்பினர்கள் இல்லாவிட்டாலும் ராஜபக்ஷ அரசாங்கம் முஸ்லிம்களின் தேவைகள் மற்றும் குறைகளை நிறைவேற்றிக்கொடுக்கும் என்ற நம்பிக்கை உள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் பைசர் முஸ்தபா தெரிவித்தார்.

அத்துடன் அரசாங்கத்தில் இரண்டு முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களே இருக்கின்றனர். அதுவும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியைச் சேர்ந்தவர்களாகும். அதனால் அமைச்சரவையில் முஸ்லிம் உறுப்பினர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை என ஜனாதிபதிக்கோ பிரதமருக்கோ குறைகூறி பயனில்லை.

இதேவேளை ராஜபக்ஷவினர் தொடர்பாக பொய் குற்றச்சாட்டுக்களை தெரிவித்து ஒருசில அரசியல்வாதிகளே ராஜபக்ஷவினரை முஸ்லிம்களின் விரோதிகளாக ஆக்கி இருக்கின்றனர். என்றாலும் உண்மை மிக விரைவில் வெளிப்படும் என்றும் அவர் கூறினார்.

No comments: