News Just In

12/24/2019 12:17:00 PM

மட்டு மாவடி ஓடை அணைக்கட்டு உடையும் அபாயம்; அச்சம் கொள்ளத் தேவையில்லை-மோகனராஜா


-ஏ.எச்.ஏ. ஹுஸைன்
மட்டக்களப்பு மாவட்டத்தில் சமீப நாட்களுக்குள்ளாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்குக் காரணமாக மாவடிஓடை பாலம் உடையும் அபாயம் உள்ளதாக வெளிவந்திருந்த தகவல்களில் எதுவித உண்மையும் இல்லை என நீர்ப்பாசனத் திணைக்களப் பணிப்பாளர் நாயகம் சீனித்தம்பி மோகனராஜா செவ்வாய்க்கிழமை 24.12.2019 தெரிவித்தார்.

பணிப்பாளர் நாயகம்; தலைமையிலான நிபுணத்துவ பொறியியலாளர் குழு வெள்ள அபாயமெடுக்கும் பகுதிகளை நேரடியாகச் சென்று கள நிலைமைகளை அறிந்து கொள்ளும் விஜயத்தை செவ்வாயக்கிழமை மேற்கொண்டு மாவடி ஓடைக்குச் சென்றிருந்தது.

பொறியியலாளர் குழுவினர் வெள்ள அபாயமேற்படக் கூடிய இடங்கiளைப் பார்வையிட்டு வருவதுடன், எதிர்காலத்தில் ஏற்படும் வெள்ளப்hதிப்புக்களிலிருந்து எவ்வாறு பாதுகாத்தல், திடீரென குளங்களிலும், அணைக்கட்டுகளிலும் உண்டாகக் கூடிய வெடிப்புக்கள், எவ்வகையான திருத்தங்கள் மேற்கொள்ள வேண்டும், என்பது தொடர்பான ஆய்வுகளையும் மேற்கொண்டு வருகின்றது.

மாவடிஓடைப் பாலம் அமைந்துள்ள களப் பிரதேசத்தில் நின்று வெள்ளப் பாதிப்புக்கள் தொடர்பாக மேலும் தெரிவித்த பணிப்பாளர் நாயம் மோகனராஜா, மாவடி ஓடைப்பாலத்தின் அணைக்கட்டு உடையவில்லை. அது அணைக்கட்டாகவேதான் இருக்கின்றது.

ஆனால் அந்த அணைக்கட்டிற்கு பக்கவடிட்டில் இடப்படும் மண் அணை அப்பகுதியில் பெருக்கெடுத்த 14 அடி வெள்ள நீரினால் தோண்டப்பட்டு, அந்த மண் கட்டு அரிக்கப்பட்டுள்ளது. அணைக்கட்டுக்கு இருபக்கமும் இடப்படும் மண்கட்டு வெள்ளநீரினால் கழுவிச் செல்லப்பட்டுள்ளது.

இந்நிலைமையை உடன் அவதானித்த எமது பொறியியலாளர் குழு இராணுவத்தினரதும், அப்பகுதி விவசாயிகளினதும் ஒத்துழைப்புடன் அந்த அரிப்பைத் தடுத்துள்ளார்கள்.

மாறாக அக்கட்டு உடைப்பெடுக்கவில்லை. இவ்விடயம் தொடர்பில் மக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை.

அணைக்கட்டுக்கு எதிர்வரும் 2020 ஆம் ஆண்டில் மேலதிக பாதுகாப்புக்கு சீட் பைல் இட்டு, மண் மற்றும், பெரிய கற்கள் இட்டு நிரப்பி பாதுகாப்பு வழங்குமாறு நாம் பரிந்துரை செய்திருக்கின்றோம்' என்றார்.










No comments: