News Just In

12/29/2019 05:28:00 PM

இடைக்கால வரவு செலவு திட்டத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க அரசாங்கம் நடவடிக்கை!

எதிர்வரும் மூன்று மாதங்களுக்கான அரசாங்கத்தின் செலவுகளுக்காக இடைக்கால வரவு செலவு திட்டத்தை அடுத்த மாதம் பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துவருகின்றது.

2020ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து அங்கீகாரத்தை பெற்றுக்கொள்ளும் வரை குறித்த இடைக்கால வரவு செலவு திட்டத்தை அரசாங்கம்  சமர்ப்பித்து அனுமதியை பெறவுள்ளதாக தெரியவருகின்றது.

கடந்த அரசாங்கத்தின் இடைக்கால வரவு செலவு திட்டம் பயனில்லை என தெரிவித்தே, புதிய இடைக்கால வரவு செலவு திட்டத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க அரசாங்கம் தீர்மானித்திருக்கின்றது.

No comments: